Headlines

திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம் : ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதரவு

திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம் : ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதரவு

திருச்சி சமயபுரத்தில் முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் நேரில் சென்று ஆதரவளித்தனர்.

முதல்வர் விஜய் தேர்தலின் போது அறிவித்தபடி, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,
40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் திருச்சி சமயபுரம் பகுதியில் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை
சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து
ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *