கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராம்சார் குறியீடு பெற்ற குளத்தின் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு மற்றும் குப்பைகள். துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதி அடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலச்சங்கரங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பனூர் பகுதியில், ராம்சார் குறியீடு பெற்ற குளம் அமைந்துள்ளது.
தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்களும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மர்ம நபர்கள் சாலை யோரத்தில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிப்பதுடன், கடும் துர் நாற்றமும் வீசி வருகிறது.இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டிய நிலையில், குப்பைகள் கொட்டப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
எனவே,குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
