Headlines
கோழிப்பண்ணையில் தீ விபத்து : தீயில் கருகிய கோழிக்குஞ்சுகள்

கோழிப்பண்ணையில் தீ விபத்து : தீயில் கருகிய கோழிக்குஞ்சுகள்

பேரணாம்பட்டு அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2750 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம் பட்டு கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் இரவு கோழி குஞ்சுகளை வளர்ப்பதற்காக பண்ணையில் இறக்கி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கோழி பண்ணையில் மின் கசிவு காரணமாக கோழி பண்ணை தீப்பிடித்து எரிந்தது. இதில்…

Read More
இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றிய ஊர் கந்தூரி விழா

இந்து – முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றிய ஊர் கந்தூரி விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ரெகுநாதபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள பள்ளிவாசலில் ஆண்டுதோறும் பிரான்மலை ஷேக் அப்துல்லா அவுல்யகல் தர்காவை வேண்டி மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் கிடாவெட்டி பிரார்த்தனை செய்து கந்தூரி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 350 கிலோ கிடாக்கறி சமைக்கப்பட்டு அதனை ஊரில் உள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய குடும்பங்களுக்கும் சரியாகப்…

Read More
சிப்காட், என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு : அன்புமணி கண்டனம்

சிப்காட், என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு : அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் சிப்காட், என்எல்சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுசிப்காட் வளாகம், நிலக்கரி சுரங்கத்தை மீண்டும் திணிப்பதும் நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கது. குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் கடலூரில்தான் செயல்படும்; இது பேரழிவு ஆகும்.சிப்காட், என்எல்சிக்காக நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறிவிடுவர். தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? திமுக…

Read More
மவுனம் காக்காமல் அரசு செயல்படுமா?- பிரேமலதா

மவுனம் காக்காமல் அரசு செயல்படுமா?- பிரேமலதா

தேமுதிக பொது செயலாளர் பிரமேலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு கேள்விகளை தவெக அரசை நோக்கி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு மவுனம் காக்காமல் தவெக அரசு உடனடியாக செயல்படுமா? டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள்; தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கு அரசு என்ன பதில் தரப்போகிறது? நெய்வேலி NLC-க்காக விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?- என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

Read More
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா : கோவையை கலக்கும் போஸ்டர்சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என ஒட்டப்பட்டுள்ள விஜய், அஜித் போஸ்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா : கோவையை கலக்கும் போஸ்டர்சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என ஒட்டப்பட்டுள்ள விஜய், அஜித் போஸ்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தய மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது இருவரும் ஆரத்தழுவி பேசியது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் மகிழ்ச்சி ஆன கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா” என்ற வசனங்களுடன் இருவரது புகைப்படங்களை…

Read More
"AI துறையைப் பாதுகாக்க AI Force " -டிரம்ப் அறிவிப்பு

“AI துறையைப் பாதுகாக்க AI Force ” -டிரம்ப் அறிவிப்பு

AI துறையைப் பாதுகாக்க AI FORCE என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதற்கான AI CZAR ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த GDP-யில் 25% அளவிற்கு AI துறை பங்களிக்கும். Al வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி அழிக்க எதிர்த்தரப்பினர் சதி செய்கின்றனர். நான் அதை முறியடிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More
அரசு மருத்துவமனை அருகாமை ஆக்கிரமிப்பு கடைகள அகற்றம்

அரசு மருத்துவமனை அருகாமை ஆக்கிரமிப்பு கடைகள அகற்றம்

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர். திருவண்ணாமலை வெளிவட்டசாவையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரி எதிரே சாலையோரத்தில் செயல்பட்டு வந்த உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை அகற்ற காவல்துறையுடன் இணைந்து நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர். அப்போது சாலையோர வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கடைகளை அமைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Read More
பல்லடம் : மது போதையில் பணியாற்றிய பஞ்சாயத்து செயலளர் சஸ்பெண்ட்

பல்லடம் : மது போதையில் பணியாற்றிய பஞ்சாயத்து செயலளர் சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மல்லேகவுண்டம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலளராக பணியாற்று வருபவர் ராஜேந்திரன்.இவர் நேற்று மது போதையில் பணியாற்றி வருவதாக பஞ்சாயத்தில் ரசீது பணம் கட்ட வந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் அதிகாரிக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவரிடம் இருந்த சாவி,பில் ரசீது,சீல் கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து மதுபோதையில் இருந்த அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்லடம் அருகே மது…

Read More
கனமழையால் சாலையில் சாய்ந்த மரங்கள் – முதியவர் காயம், வாகனங்கள் சேதம்

கனமழையால் சாலையில் சாய்ந்த மரங்கள் – முதியவர் காயம், வாகனங்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பகுதியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில், சுமார் 20 நிமிடங்கள் பெய்த கனமழையால் பல ஆண்டுகள் பழமையான புளியமரம் மற்றும் வேப்பமரங்கள் என தொடர்ந்து 5 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. மரங்கள் விழுந்ததில் ஒரு ஆட்டோ மற்றும் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், மரம் விழுந்ததில் முதியவர் ஒருவருக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு…

Read More
மழை இல்லாவிட்டாலும் டெங்கு பரவுவது ஏன்? - சுகாதார நிபுணர்கள் கூறுவதென்ன?

மழை இல்லாவிட்டாலும் டெங்கு பரவுவது ஏன்? – சுகாதார நிபுணர்கள் கூறுவதென்ன?

மழை இல்லாத காலங்களிலும் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு பரவலாம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மட்டுமின்றி பூந்தொட்டி அடிப்பகுதி, பழைய டயர்கள், தேங்காய் ஒடுகள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கொசுக்கள் பெருகலாம். ஏடிஸ் கொசு முட்டைகள் தண்ணீர் வற்றிய பிறகும் பல மாதங்கள் உயிருடன் இருக்கும். மீண்டும் தண்ணீர் தேங்கும்போது அவை பொரிந்து புழுக்களாகவும், பின்னர் கொசுக்களாகவும் உருவாகும். எனவே, மழை இல்லாத காலங்களிலும் தண்ணீர்…

Read More