Headlines
அந்தரங்க உறுப்பை கடித்த மனைவி, மூக்கை கடித்து குதறிய கணவன் ; மாறி மாறி புகார் கொடுத்த தம்பதி

அந்தரங்க உறுப்பை கடித்த மனைவி, மூக்கை கடித்து குதறிய கணவன் ; மாறி மாறி புகார் கொடுத்த தம்பதி

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த தம்பதியினர் இருவருமே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கணவன் தீபக் மற்றும் மனைவி சாதனா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சாதனா, தன் கணவனின் அந்தரங்க உறுப்பைக் கடித்துக் குதறியுள்ளார். இதனால்…

Read More
மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தரமற்ற மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பாதுகாப்பாகஅழிக்கப்பட்டன.

Read More
மலைப்பாதையில் ரயில் மீது உருண்டு விழுந்த பாறை - முன்பகுதி சேதம்

மலைப்பாதையில் ரயில் மீது உருண்டு விழுந்த பாறை – முன்பகுதி சேதம்

தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே மலைப்பாதையில் ரயில் மீது பாறை உருண்டு விழுந்ததில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் தினமும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி – சிவாடி ரயில் நிலையங்களைத் தொடர்ந்து தொப்பூர் – முத்தம்பட்டி இடையே மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் ரயில்கள் பாதுகாப்பு கருதி…

Read More
தொடர் இருசக்கர வாகனத் திருட்டு – இருவர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடர் இருசக்கர வாகனத் திருட்டு – இருவர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டு சாலையில் நகர போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்…

Read More
புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு :பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து

புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு :பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக–ஆந்திர எல்லையில் பெய்து வரும் கனமழையால், ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி, உபரி நீர் தமிழக பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழக–ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பள்ளம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தடுப்பணை முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் தமிழக…

Read More
முன்விரோதத்தால் இளைஞர் படுகொலை : ஒருவர் கைது, குற்றவாளிகளுக்கு வலை

முன்விரோதத்தால் இளைஞர் படுகொலை : ஒருவர் கைது, குற்றவாளிகளுக்கு வலை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழதேவநல்லூர் கீழ்புறம் மணிமுத்தாறு கால்வாய் கரையில், கடந்த 19ம் தேதி இரவு, முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , நாங்குநேரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் களக்காடு காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து,கீழதேவநல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரமேஷ் ராம் (33) என்பவரை, சம்பவத்தன்று…

Read More
அதிவேக தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் : போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அதிவேக தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் : போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் வாகன ஓட்டி படுகாயமடைந்தார். தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை என்று கூறி பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமாக கோவை மாநகரம் உள்ளது. இதனிடையே கோவையில் சில தனியார் பேருந்துகள் அதிகபட்ச ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட…

Read More
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொம்மனூர் கிராமத்தில், மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் தேங்காய் நார் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் பணிகளை முடித்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.இந்த நிலையில், இன்று அதிகாலை தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தபோது, மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.மளமளவென பரவிய தீ, தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள்…

Read More
அரிசி வாங்குவது போல் நடித்து முதியவரிடம் தங்க மோதிரம் பறிப்பு : பட்டப்கலில் துணிகரம்

அரிசி வாங்குவது போல் நடித்து முதியவரிடம் தங்க மோதிரம் பறிப்பு : பட்டப்கலில் துணிகரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிஅடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(73).இவர் காதர்பேட்டை பகுதி சி.என்.ஏ சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், அரிசி மூட்டைகள் வாங்குவது போல் நடித்து கண்ணன் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு…

Read More
மதுபோதை தகராறில் கொலை : பக்கத்து வீட்டுக்காரர் கைது

மதுபோதை தகராறில் கொலை : பக்கத்து வீட்டுக்காரர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கொல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன் உள்ள நிலையில் இவர் ஆற்காடு பகுதியில் மர கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆற்காடு அடுத்த செய்யாறு கூட்ரோடு அருகே செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் பகுதியில் பகுதியில் ரவி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் (36) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தும் போது இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில்…

Read More