Headlines
புதிய அரசியல் கட்சி துவங்கிய அஜித் ரசிகர்கள் : தல ரசிகர்களின் தடாலடி முடிவு

புதிய அரசியல் கட்சி துவங்கிய அஜித் ரசிகர்கள் : தல ரசிகர்களின் தடாலடி முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றிணைந்து “தமிழக மக்கள் கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளனர். மஞ்சள், வெள்ளை, சிவப்பு,ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட இந்த கட்சியின் கொடியில் நடுவே இரண்டு சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவராக ஆபித் ,மாநில செயலாளராக ராம்குமார்,மாநில பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் அஜித்குமார் ரசிகர்கள் பலர்…

Read More
சிவகங்கை இரட்டை கொலை : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தற்காலிக அரசுப்பணி

சிவகங்கை இரட்டை கொலை : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தற்காலிக அரசுப்பணி

சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டதால் நான்கு நாளாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. சிவகங்கை அருகே பழமலை நகர் அருகே உள்ள கண்மாயில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிவகங்கை காளையார்கோவில் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசாரம் சிறு…

Read More
மு.க.ஸ்டாலின், பி.டி.ஆர் தோல்வியால் அதிர்ச்சி - நடிகர் பிரகாஷ் ராஜ்

மு.க.ஸ்டாலின், பி.டி.ஆர் தோல்வியால் அதிர்ச்சி – நடிகர் பிரகாஷ் ராஜ்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா, அல்லது எஸ்.ஐ.ஆர் காரணமா என்பது தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் போன்ற முன்னணி தலைவர்கள் தோல்வியடைந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் பிரகாஷ்ராஜ், முன்னதாக ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- புதிய அரசு பொறுப்பேற்று 120 நாட்கள்தான் ஆகிறது….

Read More
விநாயகர் சிலைகள் கரைப்பு : ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு

விநாயகர் சிலைகள் கரைப்பு : ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு

சென்னை ஈசிஆர் சாலை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டுசென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை 14 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று காலை முதல் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக…

Read More
தாராபுரம் : தவெக வோட்பாளருக்கு எதிர்ப்பு : பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் முழக்கம்

தாராபுரம் : தவெக வோட்பாளருக்கு எதிர்ப்பு : பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் முழக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின்போது, பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, நேற்று வெறுவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு…

Read More
RPF Raising Day : ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

RPF Raising Day : ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

ரயில்வே பாதுகாப்புப் படையின் RPF Raising Day – 2026-ஐ முன்னிட்டு, கோவை சரகத்தில் பயணிகள் பாதுகாப்பு, ரயில்வே பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை RPF உதவி பாதுகாப்பு ஆணையர் சந்திரமோகன் மேற்பார்வையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். காலை, கோவை “குறிஞ்சி” RPF பாரக்ஸ் வளாகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்…

Read More
முதலீடு ஈர்ப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : அமைச்சர் ராஜ்மோகன்

முதலீடு ஈர்ப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : அமைச்சர் ராஜ்மோகன்

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தங்கள் முறையாக கையெழுத்தான பின்னர் முதலீடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழும், தமிழ்நாடும் முதலமைச்சர் விஜய் தலைமையில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணித்து…

Read More
இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு பக்கவாதம் - பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் தகவல்*

இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு பக்கவாதம் – பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் தகவல்*

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, பிசியோதெரபியின் முக்கியத்துவம், பக்கவாதம் மற்றும் இருதய–இரத்த நாள நோய்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “Physiothon 2026 – World Physiotherapy Day Awareness & Delta Free Cancer Zone Rally” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் மற்றும் இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்ஸ், திருச்சி கிளை சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, திருச்சி ஸ்டூடன்ட்ஸ் ரோட்டில் தொடங்கியது. பேரணியில்…

Read More
உண்ணி காய்ச்சல் : சுகாதாரத்துறை எச்சரிக்கை

உண்ணி காய்ச்சல் : சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஜனவரி வரை SCRUB TYPHUS என்ற உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, சோர்வு, வறட்டு இருமல் மற்றும் பசியின்மை ஆகியவை முதன்மை அறிகுறிகள் ஆகும். டெங்கு காய்ச்சலை போன்றே அறிகுறிகள் இருந்தாலும், இதில் தலைவலி சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு பூச்சி கடித்த இடத்தில் சிறிய புண்/சிரங்கு அல்லது நிணநீர் முடிச்சுகள் வீங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். என தெரிவித்தார்.

Read More
இடுக்கியில் கனமழை: மண்சரிவால் சகோதரர், சகோதரி உயிரிழப்பு;மனைவி படுகாயம்

இடுக்கியில் கனமழை: மண்சரிவால் சகோதரர், சகோதரி உயிரிழப்பு;மனைவி படுகாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர், சகோதரி உயிரிழந்தனர். இறந்தவரின் மனைவி படுகாயமடைந்தார்.வட்டவடா கொட்டக்கம்பூர் அம்மன் கோவில் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கொட்டக்கம்பூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னு ஆகியோர் உயிரிழந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டவடாவில் மதியம் சுமார் 12 மணியளவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து…

Read More