Headlines

பல்லடம் : மது போதையில் பணியாற்றிய பஞ்சாயத்து செயலளர் சஸ்பெண்ட்

பல்லடம் : மது போதையில் பணியாற்றிய பஞ்சாயத்து செயலளர் சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மல்லேகவுண்டம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலளராக பணியாற்று வருபவர் ராஜேந்திரன்.இவர் நேற்று மது போதையில் பணியாற்றி வருவதாக பஞ்சாயத்தில் ரசீது பணம் கட்ட வந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் அதிகாரிக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவரிடம் இருந்த சாவி,பில் ரசீது,சீல் கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து மதுபோதையில் இருந்த அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பல்லடம் அருகே மது போதையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி செய்த செயாலாளர் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *