Headlines

தொடர் இருசக்கர வாகனத் திருட்டு – இருவர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடர் இருசக்கர வாகனத் திருட்டு – இருவர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டு சாலையில் நகர போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சுபாஷ் (25), லட்சுமணன் மகன் அருண் (26) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *