Headlines

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொம்மனூர் கிராமத்தில், மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் தேங்காய் நார் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நேற்று வழக்கம்போல் பணிகளை முடித்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தபோது, மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
மளமளவென பரவிய தீ, தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்களுக்கும் பரவியதால், தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *