Headlines

முன்விரோதத்தால் இளைஞர் படுகொலை : ஒருவர் கைது, குற்றவாளிகளுக்கு வலை

முன்விரோதத்தால் இளைஞர் படுகொலை : ஒருவர் கைது, குற்றவாளிகளுக்கு வலை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழதேவநல்லூர் கீழ்புறம் மணிமுத்தாறு கால்வாய் கரையில், கடந்த 19ம் தேதி இரவு, முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , நாங்குநேரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் களக்காடு காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து,கீழ
தேவநல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரமேஷ் ராம் (33) என்பவரை, சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அதன்பேரில், ரமேஷ் ராம் தனது உறவினர்கள் இருவருடன் மணிமுத்தாறு கால்வாய் கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட தகராறில், ரமேஷ் ராமை அரிவாளால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டார்.

இதையடுத்து, களக்காடு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், இவ்வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் பூபதி (18) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்ற குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *