Headlines
ஜெம் வீரமணி வழக்கு : ஊடக விவாதங்கள் நடத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெம் வீரமணி வழக்கு : ஊடக விவாதங்கள் நடத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம்

ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள்.பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல. ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய…

Read More
நாட்றம்பள்ளி அருகே மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்

நாட்றம்பள்ளி அருகே மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் உரிய அனுமதியின்றி மண் கடத்தி வருவதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் செத்தமலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி சுமார் 4 யூனிட் மண் கடத்தியது தெரியவந்தது. மேலும் டிப்பர்…

Read More
குட்டை தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு – தவெக எம்.எல்.ஏ. மீது கல்வீச்சு ,போலீசார் லேசான தடியடி

குட்டை தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு – தவெக எம்.எல்.ஏ. மீது கல்வீச்சு ,போலீசார் லேசான தடியடி

கோவை மாவட்டம் சூலூர் அருகே நாகம்மநாயக்கன்பாளையத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலர் எம்.எல்.ஏ. மீது கற்களை வீசியதாக கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்த குட்டை, மழைக்காலங்களில் நீரைத் தேக்கி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி…

Read More
குடும்ப அட்டை பயனாளிகள் கைவிரல்ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் : ஆட்சியர் அறிவிப்பு

குடும்ப அட்டை பயனாளிகள் கைவிரல்ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் : ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்- 2013-இன் படி முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல்ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மேலும் இப்பணியானது கடந்த அக்டோபர் 2023 முதல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுநாள் வரை கைவிரல்ரேகை பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை (PHH)…

Read More
சாலையோரம் கிடந்த ரூ.3.80 லட்சம் : கருவூலத்தில் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்

சாலையோரம் கிடந்த ரூ.3.80 லட்சம் : கருவூலத்தில் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, உரிய ஆவணங்களின்றி அதிக அளவில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றால், அவற்றை அதிகாரிகள்…

Read More
ரஷ்யா vs அமெரிக்கா :கச்சா எண்ணெய் இறக்குமதி சிக்கலில் இந்தியா

ரஷ்யா vs அமெரிக்கா :கச்சா எண்ணெய் இறக்குமதி சிக்கலில் இந்தியா

இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள், சீன சந்தையின் அதிக தேவை மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு செப்டம்பர் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு 2.08 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, செப்டம்பரில் நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பீப்பாய்களாகச் சரிந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி…

Read More
இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கோவை மாவட்ட இந்து முன்னணி பேச்சாளராகப் பணியாற்றினார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ஆரம்பத்தில்…

Read More
அரசு மருத்துவர்களுக்கு மிரட்டல் : தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு

அரசு மருத்துவர்களுக்கு மிரட்டல் : தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு

வால்பாறை அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தீட்சிதன் கடந்த வியாழன்று சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வால்பாறை தவெக நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட 20 பேர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ராஜசேகர் மற்றும் மதுபிரியா ஆகியோருடன் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை…

Read More
கல்குவாரியை மூடியது மரகதம் குமரவேலா? : கிராம மக்கள் வாக்குவாதம், தவெகவினர் விரட்டியடிப்பு

கல்குவாரியை மூடியது மரகதம் குமரவேலா? : கிராம மக்கள் வாக்குவாதம், தவெகவினர் விரட்டியடிப்பு

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் கல்குவாரியை மூட மரகதம் குமரவேல் தான் காரணம் என தவறான தகவல் கூறி வாக்கு சேகரித்த தவெகவினரை கிராம மக்கள் விரட்டியடித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவம்பாக்கம் ஊராட்சி, கொளத்தூர் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் பாறைகளவ உடைக்க வெடி வைக்கும் போது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சப்தத்துடன் கூடிய நிலஅதிர்வு மற்றும் கற்கள் வீட்டின் மீது வந்து விழுந்து வீடுகள் சேதம் மற்றும் பலருக்கு காயம்…

Read More
வேட்பாளர் எங்கே? அமைச்சரை கேள்வி கேட்ட அதிமுகவினர் : தவெக , அதிமுக தள்ளுமுள்ளு

வேட்பாளர் எங்கே? அமைச்சரை கேள்வி கேட்ட அதிமுகவினர் : தவெக , அதிமுக தள்ளுமுள்ளு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த முறை தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதன் காரணமாக தாராபுரத்தில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டார். தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.இதனால்…

Read More