ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள்.
பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல.
ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நிதிபதி வி.லட்சுமிநாராயணன்
இந்த வழக்கு சம்பந்தமாக விவாதங்கள் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்ட அவர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய மாநில அரசுகள், காவல் துறை, வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
