Headlines
நீட் தேர்வில் தேர்ச்சி- கலந்தாய்வில் விடுபட்ட பெயர் : மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தேர்ச்சி- கலந்தாய்வில் விடுபட்ட பெயர் : மாணவி தற்கொலை

பாளையங்கோட்டையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், முதற்கட்ட கலந்தாய்வில் பெயர் இடம்பெறாததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைபாளையங்கோட்டை அன்பு நகர் அருகே உள்ள சித்தார்த்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஸ்ருதி லயா (வயது 21) என்ற மகள் மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.ஸ்ருதி லயா பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2023-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார்….

Read More
பந்தய மாட்டுடன் இளைஞர் பலி : இடியால் சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

பந்தய மாட்டுடன் இளைஞர் பலி : இடியால் சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேஇடி தாக்கியதில் பந்தயத்திற்காக ஆசையாய் வளர்த்த காளை மாட்டுடன், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தெற்கு மஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய மகன்பூவரசன்(18). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாமன்னர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை2-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் மாட்டுவண்டி பந்தயத்திற்கான பந்தய மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில் மஞ்ச…

Read More
நேபாள வெள்ளம் : தமிழகம் திரும்பிய 21 பேர் - வரவேற்ற அமைச்சர்கள்

நேபாள வெள்ளம் : தமிழகம் திரும்பிய 21 பேர் – வரவேற்ற அமைச்சர்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லியில் தமிழர்கள் குறித்து தகவல் சேகரித்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். முத்ற்கட்டமாக சென்னையை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர், கடலூரை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9…

Read More
சட்டவிரோத மது விற்பனை செய்யும் பெண்கள் : ஷாக் வீடியோ வைரல்

சட்டவிரோத மது விற்பனை செய்யும் பெண்கள் : ஷாக் வீடியோ வைரல்

திருப்பூர் – வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்கள் தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாளிலும், கடைகள் செயல்படாத நேரத்திலும் மதுபான பாட்டில்களை கோட்டர், கட்டிங் அளவுகளில் விற்பனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரவு, பகல் என நேரம் காலம் பாராமல் நடைபெறும் இந்த மதுபான விற்பனையால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் நடைபெற வாய்ப்பு…

Read More
ரூ.150 கோடி மோசடி : போர்களமான நத்தம் - போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

ரூ.150 கோடி மோசடி : போர்களமான நத்தம் – போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL எனப்படும் செயலி மூலம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் நபர்களின் வீடுகளை, பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். FQL செயலியில்…

Read More
மனைவியுடன் கள்ளத்தொடர் சந்தேகம் : 40 ஆண்டுகால நண்பரை கொன்ற முதியவர்

மனைவியுடன் கள்ளத்தொடர் சந்தேகம் : 40 ஆண்டுகால நண்பரை கொன்ற முதியவர்

​ கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர். நாகராஜ் (62). பாக்கு மட்டை வியாபாரி.இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கந்தசாமி (65) காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக…

Read More
நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : களத்தில் இறங்கிய தமிழக அமைச்சர்கள்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : களத்தில் இறங்கிய தமிழக அமைச்சர்கள்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு அமைச்சர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும், தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில்…

Read More
குவியல் குவியலாக அழிக்கப்பட்ட மது பாட்டில்கள் : ஆந்திர போலீசார் அதிரடி

குவியல் குவியலாக அழிக்கப்பட்ட மது பாட்டில்கள் : ஆந்திர போலீசார் அதிரடி

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டத்தில் உள்ள முனகபாகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 38,379 கள்ளச்சாராய மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். 2024 பொதுத் தேர்தலின் போது, ​​ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஈஸ்வர் ராவ் கூறினார். முனகபாகா அருகே உள்ள வுடா லேஅவுட்டில் சாலையில் ரோடு ரோலர் மூலம் மதுபாட்டில்களை அழித்தனர். அனகாபள்ளி காவல்…

Read More
சினிமா பாணியில் சேஸிங்- கடத்தல் லாரியை விரட்டி பிடித்த தாசில்தார் : மதுரையில் பரபரப்பு

சினிமா பாணியில் சேஸிங்- கடத்தல் லாரியை விரட்டி பிடித்த தாசில்தார் : மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை வாட்டாட்சியர் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்தத்து. இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65…

Read More
அடுத்த ஆபத்து :நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த ஆபத்து :நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. இன்று காலை பல இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. திபெத்தின் லெண்டே நதியில் உருவான வெள்ளம், போடே கோசி நதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியது. ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் திரசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. இதனால் நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் இன்று நேபாள பேரிடர்…

Read More