Headlines

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : களத்தில் இறங்கிய தமிழக அமைச்சர்கள்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : களத்தில் இறங்கிய தமிழக அமைச்சர்கள்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு அமைச்சர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும், தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 495-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என கூறப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த பேரிடரில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மைய குழுவைச் சேர்ந்த 80 பெரும்பான்மையான நேபாளம் சென்றுள்ளனர். அவர்களது நிலை குறித்தும் தெரியவில்லை.

ஆன்மிக பேச்சாளர் தேச. மங்கையர்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 150 பேர் பாதுகாப்பாக திபெத்தில் உள்ளனர். இது தொடர்பாக தேச.மங்கையர்க்கரசி, தாங்கள் 150 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இவர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 150 பேரும் திபெத்திலேயே தங்கியுள்ளனர் என்று தகவல் வந்துள்ளது.

இதையடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. நேபாள பெருவெள்ள பகுதிகளில் சிக்கியதாக கருதப்பட்டு, தொடர்பற்றுப் போயுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து அறிவதற்காக அவர்களின் உறவினர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நேற்று இடைவிடாது தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் சென்றுள்ளது.

இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றனர்.

இந்த நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் குழு இன று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *