Headlines

அடுத்த ஆபத்து :நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த ஆபத்து :நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

இன்று காலை பல இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான வெள்ளம், போடே கோசி நதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியது.

ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் திரசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. இதனால் நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளது.

மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் இன்று நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

.அடுத்த ஆபத்து :நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

திபெத்திய ஏரி நிரம்பி வழிவதால், போட்டே கோசி ஆற்றில் அதிக அளவிலான சேறு மிக வேகமாக பாய்ந்து வருவதாக எச்சரித்துள்ளது.
மேலும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து விரைந்து வெளியேற நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் நேபாளத்தில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் வழியாக அவசரச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் திரிசூலி நதிக்கரையோரம் வசிக்கும் மக்களை ஆற்றங்கரையிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *