Headlines

சட்டவிரோத மது விற்பனை செய்யும் பெண்கள் : ஷாக் வீடியோ வைரல்

சட்டவிரோத மது விற்பனை செய்யும் பெண்கள் : ஷாக் வீடியோ வைரல்

திருப்பூர் – வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்கள் தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாளிலும், கடைகள் செயல்படாத நேரத்திலும் மதுபான பாட்டில்களை கோட்டர், கட்டிங் அளவுகளில் விற்பனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இரவு, பகல் என நேரம் காலம் பாராமல் நடைபெறும் இந்த மதுபான விற்பனையால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்குள் பெண்களே சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யும் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *