சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் : குன்னூர் அருகே பொதுமக்கள் நடமாட தடை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகளை வெடி வைத்து தகர்க்க முயன்றபோது எதிர்பாராத விதமாக வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், பாறைகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள மேலும் 3-க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிக்காக சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வெடிபொருட்களை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மதியம் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்தவொரு தொழிலாளரும்…
