எவற்றையெல்லாம் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டியது குறித்து தமிழக அரசுக்கு புரிதல் தேவை என்றும், மேட்டூர் அணையின் தற்போதையுள்ள 90 அடி இருப்பைக் கொண்டு சாகுபடி செய்ய முடியாது அதனால் மீண்டும் விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்துக்குரிய உரிமை தண்ணீரை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் , மத நல்லிணக்கம் , மக்கள் ஒற்றுமை மற்றும் சிறு , குறு , நடுத்தர தொழில்களை பாதுகாத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் சந்திப்பு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.சண்முகம் , தூத்துக்குடியில் 1600 மெகாவாட் உற்பத்தி கொண்ட அனல்மின்நிலையம் அமைக்கப்படும் என்பதை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் , எதை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டியது குறித்து தமிழக அரசுக்கு புரிதல் தேவை என்றார்.
புதிய பாடத்திட்டத்தை உருவாக்க மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்த காலக்கெடு முடிந்த நிலையில் , அது மக்களுக்கு சென்றடையாததால் , கருத்து கேட்பதை 50 நாள் நீடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம் ,
தமிழக முதல்வர் பாலுக்கான கொள்முதல் விலையை 41 ரூபாயிலிருந்து 44 உயர்த்தி அறிவித்திருக்கிறார் இதனை சிபிஎம் கட்சி வரவேற்கிறது.
இருப்பினும் தீவன தட்டுப்பாட்டால் தீவனத்தின் விலை அதிகரிக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்
நாளை டெல்டா பர்சனத்திற்காக முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கிறார் ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி, முற்றிலும் இல்லாமல் போய்விட்டது ஒரு போக சாகுபடி முழுமையாக நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கும் நிலையில் கர்நாடக மாநில அரசாங்கம் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் திறப்பதற்கு பதிலாக தமிழகத்தை வஞ்சிக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்ற அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் யார் ஆண்டாலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறார்கள்.
இந்த ஆண்டு தராத தண்ணீரால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
மேட்டூர் அணையின் தற்போதையுள்ள 90 அடி இருப்பைக் கொண்டு சாகுபடி செய்ய முடியாது அதனால் மீண்டும் விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு இடமிருந்து தமிழகத்துக்குரிய உரிமை தண்ணீரை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் தண்ணீர் திறந்தவுடன் தரமான விதை, உரம் உள்ளிட்டவை தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் .
சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும் இருவருமே கச்சேரி மன்றமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, மானிய கோரிக்கைகளுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசுவதை வாடிக்கையாக இருக்கிறது.
இதனால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது சட்டமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்துவதில் ஆளுங்கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது.
ஆகவே அமைச்சர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது மிக மிகவும் தவறானது.
பதிவாக கூடிய வார்த்தைகளை விட நீக்குவது தான் அதிகமாக இருக்கிறது வார்த்தைகளை நீக்குவது என்பது எப்போதாவது நடக்க கூடிய ஒன்று ஆனால் இப்பொழுது அன்றாடம் நடக்கிறது இதை உணர்ந்து கவனத்துடன் அமைச்சர்கள் பேச வேண்டும்.
அமைச்சர்கள் மானிய கோரிக்கையை மீறி அனாவசியமாக பேசுவதை தடுப்பதை தடுக்கும் வகையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காரணமான யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவது குறித்த கேள்விக்கு , தவெக கட்சியினர் ஆசையை விருப்பத்தை தெரிவித்து இருப்பதால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் விலகுவது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அமைச்சரவையில் இருந்து விலகுவது காங்கிரஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஆனால் ஒரு மாநிலத்திற்குள் இருக்கக்கூடிய ஒரு கட்சி உடனடியாக பிரதமராக வரும் வாய்ப்பு இந்தியா போன்ற பரந்த நாட்டில் இல்லை, ஒரே ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருக்கக்கூடிய கட்சி உடனடியாக பிரதமராக வந்துவிடலாம் என்பது அந்தக் கட்சிக்காரர்களின் ஆசையாக இருக்கலாம்.
குறைந்தபட்சம் அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடியை செய்யும் வகையில் அரசு தள்ளுபடி அறிவிப்பின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் போது கூட ஆரம்பத்தில் சொன்னபடி இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து சிபிஎம் ஆதரவு கொடுக்கும் என்ற நிலைப்பாடு தெரிவித்து இருக்கிறோம்.
இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை அதே போன்று எதிர் காலத்திலும் மாற்றமும் இருக்காது என்றார்.
