மாதனூர் அருகே அனுமதியின்றி பாலாற்றில் இரவு நேரங்களில் கடத்தப்பட்டு குவிக்கப்பட்டு இருந்த 100 லோடு மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், வெங்கிலி , குளிதிகை உள்ளிட்ட பகுதிகளில் மயில் என்ற மயில்வாகனன் என்பவர் அனுமதியின்றி இரவு நேரங்களில் நாள்தோறும் விடிய விடிய டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து
வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது மணல் கடத்த முயன்றவர்களை விசாரித்தபோது பாலூர் ,ஆர்பட்டி பகுதிகளில் மூன்று இடங்களில் மறைமுகமாக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மணல் குவியல்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது .
இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் நாள்தோறும் இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆட்களை வைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தும் கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும், தற்போது பறிமுதல் செய்யக்கூடிய மணல் குவியல்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி முன்னிலையில் பொதுமக்களுக்கு ஏலம் விட வேண்டும் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
