மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (62). இவர் மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவுமுறை சார்ந்த, 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த அவரது தாயார், அதிர்ச்சியடைந்து உடனடியாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முதியவர் சுப்ரமணியை போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
