Headlines

TCD Newsroom

டாஸ்மாக் சரக்கு புடிக்கல : சாராயம் தயாரித்தவர் கைது

டாஸ்மாக் சரக்கு புடிக்கல : சாராயம் தயாரித்தவர் கைது

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார்சாராய ஊரல்களை அழித்தனர். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட சாராய ஊரல்கள் மற்றும் உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கருமத்தம்பட்டி, படுவம்பள்ளி, ஜங்கமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் டாஸ்மாக் மதுபானத்தின் சுவை பிடிக்காததால், சொந்தமாக கள்ளச்சாராயம்…

Read More
முன்னாள் முதல்வர் தோட்டத்தில் திருட்டு : 4 பேர் கைது

முன்னாள் முதல்வர் தோட்டத்தில் திருட்டு : 4 பேர் கைது

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தோட்டத்தில் மின் ஒயர்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பூர்வீக வீடு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. அங்கேயே தோட்டமும் உள்ளது. இந்த தோட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் மூத்த அண்ணன் கோவிந்தராஜூ பராமரித்து வருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த மின் மோட்டார்களுக்கான ஒயர்களை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை தோட்டத்துக்கு சென்ற…

Read More

தவெக ஆட்சி விளம்பர ஆட்சி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்தார். தவெகவின் 100 நாள் ஆட்சியை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது விளம்பர ஆட்சி. இந்த ஆட்சி மக்கள் மனதை கொள்ளை கொள்ளவில்லை. மக்களுக்கு திருப்தி தரும் வகையில் இல்லை. மக்களை ஏமாற்றும் ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தவெக ஐடி விங் போலியாக பேச வைத்து பரப்பி…

Read More
கோவை ; குறிச்சி்குளத்தை தூய்மைப்படுத்திய வீ த லீடர்ஸ் அமைப்பினர்

கோவை ; குறிச்சி்குளத்தை தூய்மைப்படுத்திய வீ த லீடர்ஸ் அமைப்பினர்

​ “நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை” என்ற முழக்கத்துடன், கோவை குறிச்சி குளத்தில் ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders Foundation) அமைப்பின் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் தீவிரத் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றினர். ​குறிச்சி குளத்தில் குவிந்த மது பாட்டில்கள்: கோவை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான குறிச்சி குளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் இந்தத் தூய்மைப்…

Read More
வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள். *100 நாள் ஆட்சியை எப்படி பார்க்கிறார்கள்? – என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், படுமோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.வரலாற்றில் வாய்ஜாலம் மட்டுமே இந்த ஆட்சியில் இருக்கிறது. மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. இவர்கள் அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 110 விதியின் கீழ் மறைந்த அம்மா அவர்களும் அறிவித்தார்கள் ஆனால் இன்றைக்கு…

Read More
பஞ்ச டயலாக் பேச 3 நாள் ரிகர்சல் செய்யும் முதல்வர் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பஞ்ச டயலாக் பேச 3 நாள் ரிகர்சல் செய்யும் முதல்வர் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டமன்றத்தில் நாளை திரைப்பட வசனம் போல் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வர் விஜய் 3 நாட்கள் ரிகர்சல் செய்துவிட்டு வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்தனர். 84 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்து வெளியே…

Read More
பள்ளி வளாகத்தில் பெற்றோர் மோதல் : 8 மாணவிகள் சஸ்பெண்ட்

பள்ளி வளாகத்தில் பெற்றோர் மோதல் : 8 மாணவிகள் சஸ்பெண்ட்

கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், இருதரப்பு பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு தீவிரமாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இடையே வகுப்பறையில் தனிப்பட்ட காரணங்களால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த இருதரப்பு பெற்றோர்களும் பள்ளிக்கு நேரில் வந்துள்ளனர்.அப்போது பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை திடீரென முற்றி,…

Read More
தேவாலயத்தில் திருட்டு : போலீசார் விசாரணை

தேவாலயத்தில் திருட்டு : போலீசார் விசாரணை

நெல்லை பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி தலைமை தேவாலயத்தின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு நடைபெற்ற திருட்டு திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை பாளையங்கோட்டை திருவனந்தபுரம் பிரதான சாலையில் கதீட்ரல் தேவாலயம் அமைந்துள்ளது. இது தென்னிந்திய திருச்சபையின் (CSI) திருநெல்வேலி பேராயத்தின் தலைமை தேவாலயமாக செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் வாராந்திர திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம். திருப்பலி முடிந்ததும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திவிட்டு செல்வதும் வழக்கமாக…

Read More
சுடுகாட்டில் சூதாட்டம் : திருவண்ணாமலை அருகே 9 பேர் கைது

சுடுகாட்டில் சூதாட்டம் : திருவண்ணாமலை அருகே 9 பேர் கைது

திருவண்ணாமலை அருகேசுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யபட்டு, அவர்களிடமிருந்து ரூ.98,830 ரொக்கம், 12 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலையை சுற்றி பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் ஆடப்பட்டு வருவதாக திருவண்ணாமலை நகர துணை கண்காணிப்பாளர் துரைகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் நகர துணை கண்காணிப்பாளர் துரைகுமார் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வர அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து…

Read More
குளுக்கோஸ் பாட்டிலை சுமந்த நோயாளிகள்,உறவினர்கள் : அரசு மருத்துவமனையில் அவலம்

குளுக்கோஸ் பாட்டிலை சுமந்த நோயாளிகள்,உறவினர்கள் : அரசு மருத்துவமனையில் அவலம்

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்டாண்ட் இல்லாமல் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்லும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை – சேலம் – திருச்சி – மதுரை ஆகிய மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இதனால் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று…

Read More