கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார்
சாராய ஊரல்களை அழித்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட சாராய ஊரல்கள் மற்றும் உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கருமத்தம்பட்டி, படுவம்பள்ளி, ஜங்கமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்
டாஸ்மாக் மதுபானத்தின் சுவை பிடிக்காததால், சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்ததுடன், அதனை மற்றவர்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்
பின்னர் சம்பவ இடத்தில் இருந்த சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
