திருவண்ணாமலை அருகே
சுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யபட்டு, அவர்களிடமிருந்து ரூ.98,830 ரொக்கம், 12 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையை சுற்றி பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் ஆடப்பட்டு வருவதாக திருவண்ணாமலை நகர துணை கண்காணிப்பாளர் துரைகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் நகர துணை கண்காணிப்பாளர் துரைகுமார் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வர அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் மேற்கு காவல் நிலைய போலீசார் சூதாட்டம் ஆடுவது குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது நல்லவன்பாளையம் சுடுகாட்டில் சில நபர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடமான நல்லவன்பாளையம் சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், செல்லப்பன், முத்துகுமரவேல், டைசன், சிவக்குமார், கார்த்தி, வேடி, சுரேஷ் மற்றும் மான்ராஜ் ஆகிய 9 பேரை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 99,830 ரூபாய் ரொக்க பணம், 12 செல்போன்கள் மற்றும் நான்கு இருசக்க வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
