கோவையில் கொள்ளையடித்த கும்பல் : உளுந்தூர்பேட்டையில் மடக்கி பிடித்த போலீசார்
கோவை மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளுடன் காரில் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் கோயம்புத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக…
