Headlines

நேபாளம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த மூதாட்டி 11 நாட்களுக்கு பின் மீட்பு

நேபாளம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்த மூதாட்டி 11 நாட்களுக்கு பின் மீட்பு

நேபாளத்தில் சேறும்,சகதியுமான கட்டிட இடிபாடுகளில் 11 நாட்களாக சிக்கி தவித்த மூதாட்டி மீட்கப்பட்டார்.

பனிப்பாறை உடைப்பால் கடந்த ஆகஸ்ட் 26ல்
திபெத்தின் லெண்டே நதியில் உருவான வெள்ளம், போடே கோசி நதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியது.

ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் திரசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்தது. இதனால் நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன.

வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 1344 பேர் உயிரிழந்தனர். இதுவரை 13000 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 4898 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி 11 வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார்.

நுவாகோட் மாவட்டத்தில் பகுதியளவு மண்ணில் புதையுண்டிருந்த தனது வீட்டின் நான்காவது தளத்தில் இருந்து மூதாட்டி சண்டிகா ஷ்ரேஸ்தா 64., மீட்கப்பட்டுள்ளார்.

நேபாள பிரதமர் அலுவலக அறிக்கையின்படி, ஆய்வாளர் சுமன் பிக் தலைமையிலான ஆயுதப்படையினர் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டுள்ளனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திரிசூலியுள்ள நேபாள ராணுவத்தின் மைத்திலி படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *