மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,612 கன அடியிலிருந்து,
வினாடிக்கு 9,709 கன அடியாக அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை
நிலவரப்படி 92.33 அடியாக இருந்தது தற்போது 92.39 அடியாக அதிகரித்து உள்ளது. நீர் இருப்பு.55.42 டி எம் சி யாக உள்ளது.
