Headlines
மகேந்திரகிரி இஸ்ரோ :கிரையோஜெனிக் இன்ஜின் விமான ஏற்பு சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோ :கிரையோஜெனிக் இன்ஜின் விமான ஏற்பு சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், எல்.வி.எம்.3 விண்கலத் திட்டத்திற்கான கிரையோஜெனிக் இன்ஜினின் விமான ஏற்பு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான தேவையான கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விமான ஏற்பு சோதனை தற்போது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வெற்றி இலக்குகளை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விண்வெளியில் மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட ராக்கெட்…

Read More
கோவை நகை கொள்ளை : புனேவில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

கோவை நகை கொள்ளை : புனேவில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

கோவையில் ஆந்திரத் தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி பணத்தைக் கொள்ளை அடித்துத் தப்பியோடிய வடமாநிலக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்யக் கோவை தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் முகாமிட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர் தமாம் ரங்கசாமி. பிரபல தொழிலதிபரான இவர், நகைகள் வாங்குவதற்காகக் கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து சொகுசு ஆம்னி பேருந்தில் கோவைக்கு வந்தார். ரேஸ்கோர்ஸ் காவல் எல்லைக்கு உட்பட்ட லட்சுமி…

Read More
பரந்தூர் அருகே சிப்காட் : நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

பரந்தூர் அருகே சிப்காட் : நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த திமுக அரசில்காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. 5,800 ஏக்கரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 2026 ஆட்சி மாற்றத்திற்கு பின் பொறுப்பேற்ற முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான…

Read More
கோவை : 8 மாதங்களில் 117 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவை : 8 மாதங்களில் 117 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவை மாநகர பகுதியில் கடந்த 8 மாதங்களில் குற்றச்செயலில் ஈடுபட்ட 117 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவை மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் கார்த்திகேயன், தங்கதுரை மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 24 மணி நேரம் ரோந்து திட்டத்தில் உள்ள காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு சந்தேக நபர்களை பிடித்து…

Read More
சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு ; குடிநீர் விநியோகத்தை குறைக்க திட்டம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு ; குடிநீர் விநியோகத்தை குறைக்க திட்டம்

போதிய மழை இல்லாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் வினியோக இடைவெளியை அதிகரிக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மாநகருக்கு தினசரி 308.89 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 மற்றும் ஆழியார் திட்டங்கள் மூலம் குடிநீர் தரப்படுகிறது. எல்நினோ காரணமாக பருவமழை குறைந்தது.சிறுவாணி, பில்லூர் அணைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. அணைகளில் நீர் குறைந்து வருவதால், குடிநீர் வினியோகம் இடைவெளியை அதிகரிக்க…

Read More
"ஆம்னி பேருந்தில் மின்கசிவு" ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள் - தவெகவினர் சாலை மறியல்!

“ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள் – தவெகவினர் சாலை மறியல்!

​ கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து வெளியேறிய நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து வழங்காததைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பயணிகளுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சிங்காநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. பேருந்தில்…

Read More
நள்ளிரவில் தொடர் மின்தடை : மின்வாரிய அலுவலகம் முற்றுகை

நள்ளிரவில் தொடர் மின்தடை : மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஆம்பூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நள்ளிரவில் தொடரும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பல்வேறு கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தீவிரமடைந்துள்ள அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் ஒருபுறமிருக்க, இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சூழலில், இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி…

Read More
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து : பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து : பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்து

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான அப்துல்லாபூர்மேட்டில் உள்ள படாசிங்காரம் பகுதியில், அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்சுக்நகர் பணிமனைக்குச் சொந்தமான தெலங்கானா மாநில போக்குவரத்து கழக பேருந்து,கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தில்சுக்நகரிலிருந்து சௌட்டுப்பல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திடீரென திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வேகம்…

Read More
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : ஆசிரியர் கைது

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : ஆசிரியர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.​இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டிலேயே களைக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அம்மாணவி, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றநிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு…

Read More
மலிவு விலை எனக்கூறி விற்கப்பட்ட போலி உரம் : 2 டன் பறிமுதல், இருவருக்கு வலைவீச்சு

மலிவு விலை எனக்கூறி விற்கப்பட்ட போலி உரம் : 2 டன் பறிமுதல், இருவருக்கு வலைவீச்சு

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியில் விவசாய தேவைக்கான உர மூட்டைகளை லாரியில் வைத்து வீடு வீடாக சென்று ஒரு கும்பல் விற்பனை செய்துள்ளது. கடைகளில் 2200 ரூபாய்க்கு விற்பனையாகும் உர மூட்டைகளை தாங்கள் 1100 ரூபாய்க்கு மலிவு விலைக்கு தருவதாக கூறியதால், அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கி உள்ளனர். ஆனாலும் இது தொடர்பாக சில விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வேளாண் துறை அதிகாரிகள்…

Read More