Headlines
தவெக ஆட்சியில் 20% முதல் 50% வரை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : அன்புமணி ராமதாஸ்

தவெக ஆட்சியில் 20% முதல் 50% வரை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுதனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.மக்களின் பயணத் தேவையை பயண்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றனர். 11-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.3,999, மதுரைக்கு ரூ.4000, கோவைக்கு ரூ.6154 வரையிலும் வசூல் செய்யபடுகிறது.14-ஆம் தேதி சென்னைக்கு திரும்ப திருச்சியிலிருந்து…

Read More
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. 3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெற…

Read More
பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு : மகிழச்சியில் கிராம மக்கள்

பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு : மகிழச்சியில் கிராம மக்கள்

திருப்பூர் அருகேவெள்ளியம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்குள் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறத்துள்ளதால் கடந்த10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராம மக்கள், விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழிக்குள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி கழிவு குப்பைகள் 10000 டன் அளவிற்கு கொட்டியதால், கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேடு,…

Read More
"முதல்ல ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும்; அப்புறம் புதிய சட்டமன்றம் பற்றி தவெக சிந்திக்கலாம்" : கனிமொழி எம்.பி

“முதல்ல ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும்; அப்புறம் புதிய சட்டமன்றம் பற்றி தவெக சிந்திக்கலாம்” : கனிமொழி எம்.பி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்த கனிமொழி, ஒரு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தவெக ஆட்சி ராஜினாமா செய்ய வைத்தது. இந்த குதிரை…

Read More
திமுக., தவெக.,வை தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.,

திமுக., தவெக.,வை தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.,

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்கை தவிர்த்த மற்ற 6 தொகுதிகளிலும் வென்ற அதிமுக வேட்பாளர்கள், தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் ஐக்கியமானதால் காலியானதாக அறிவிக்கப்பட்டவை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல்…

Read More
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் : கைவிட இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் : கைவிட இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை, மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இத்திட்டத்தால் கடலோரச் சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றத் தாங்கும் திறன் மற்றும் முக்கிய அரசு நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். ரூ. 1,200…

Read More
மின்சார டூவிலர் மீது மோதிய டிப்பர் லாரி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மின்சார டூவிலர் மீது மோதிய டிப்பர் லாரி : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே​கருவேல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது ஓலா இருசக்கர வாகனத்தில் போடேந்திரபுரம் விலக்கு பகுதியைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக லட்சுமணனின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. ​இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனை, அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர…

Read More
காட்பாடி தேவாலய விபத்து: 3 பேர் உயிரிழப்பு - மீட்பு பணியில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

காட்பாடி தேவாலய விபத்து: 3 பேர் உயிரிழப்பு – மீட்பு பணியில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சிஎஸ்ஐ தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், கட்டிட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் ஒருவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) 38 பேர் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். காட்பாடியை அடுத்த மண்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிதாக சிஎஸ்ஐ தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் மேல் தளம் அமைக்கும் பணிகள் நேற்று…

Read More
ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது

சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீசார், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு 10 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையம் மற்றும் வடக்கு மண்டல சைபர் குற்ற காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சைபர் நிதி மோசடி வழக்குகளில், வெளிமாநிலங்களில் தலைமறைவாக…

Read More
ஜெர்மனியில் உலோகத்துறை கண்காட்சி : தமிழக நிறுவனங்களுக்கு அழைப்பு

ஜெர்மனியில் உலோகத்துறை கண்காட்சி : தமிழக நிறுவனங்களுக்கு அழைப்பு

2027ம் ஆண்டு ஜூன் மாதம் 21 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை கொடிசியாவில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த இந்த நிகழ்வின் நிர்வாகிகள் Andre Kilmm, Malte Seilert, Till Schreiter ஆகியோர்…

Read More