Headlines

வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : ஸ்தம்பித்த சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் : ஸ்தம்பித்த சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி பின்புறமாக மோதியதில் பாய்ந்த கார் எதிர் திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மாந்திர மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி வழியாக சென்னை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலை முதல் சென்று வருகின்றன.
மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

இந்நிலையில் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காவேரிப்பட்டினம் அடுத்த சந்தாபுதம் பகுதியில் வந்தபோது காரின் பின்னே வந்த லாரி ஒன்று காரின் பின்புறம் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் சென்று அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மீது மீது மோதியது. இந்த விபத்தில் கார் தூக்கி வீசப்பட்டு கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் கண்டெய்னர் லாரி எதிர் திசையில் சென்று சாலையின் நடுவில் நின்றது. இதில் காரில் இருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் எதிர் எதிர் திசையில் கண்டெய்னர் லாரி மற்றும் கார் இரண்டும் சாலையின் நடுவே நின்றதால் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் பல கிலோமீட்டருக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டினம் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியிடப்பட்டு சீர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *