Headlines

திருப்புவனத்தில் துணிகரம் : தலைமையாசிரியர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருப்புவனத்தில் துணிகரம் : தலைமையாசிரியர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருப்புவனத்தில் பூட்டியிருந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 126 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தடயங்களை சேகரிக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *