திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில்ப அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இறுதி நாளான இன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா பொன்னுசாமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுதாக்கல் நிகழ்வில் தவெக
பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றி வேட்பாளர் சத்தியபாமா.
வெற்றி வாகை சூட சத்தியபாமா போட்டியிடுகிறார்
திமுக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்ற நிலை வந்த போது தனது பதவியை ராஜினாமா செய்து
தவெக வில் இணைத்துள்ளார் சத்தியபாமா.வாக்கு சேகரிக்க அமைச்சர்கள் வந்துள்ளார்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் விசில் சின்னம் வரலாறு படைத்தது.இடைத்தேர்தலில் வெற்றி வரலாறு படைப்பதாக அமையும் .மேலும் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் வருவார்.
முதலமைச்சர் வாக்கு சேகரிக்க வருவார் என்றார்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில்
உப்பாறு அணைக்கு பாசன வசதி பெற தண்ணீர் விடப்படும் என்றார்.
அமைச்சர் அருண் ராஜ் கூறுகையில்
நான்கு மாத தவெ
க அரசின் திட்டங்களை எடுத்து சொன்னாலே வெற்றி உறுதியாகும்.
ஊழல் இலாத ஆட்சி கொடுப்போம் என சொன்னோம். அதை செய்து காட்டியுள்ளோம்.
எதிராக இருந்த கட்சிகள் நாங்கள் 108 தொகுதி ஜெயித்த பிறகு என்ன செய்தார்கள் என மக்களுக்கு தெரியும்
யாரிடமும் நாங்கள் கள்ள உறவை வைத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலின் போது,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
