Headlines

RPF Raising Day : ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

RPF Raising Day : ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

ரயில்வே பாதுகாப்புப் படையின் RPF Raising Day – 2026-ஐ முன்னிட்டு, கோவை சரகத்தில் பயணிகள் பாதுகாப்பு, ரயில்வே பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை RPF உதவி பாதுகாப்பு ஆணையர் சந்திரமோகன் மேற்பார்வையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

காலை, கோவை “குறிஞ்சி” RPF பாரக்ஸ் வளாகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், குற்றத் தடுப்பு மற்றும் ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போத்தனூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பில் மோப்ப நாய்களின் பங்கு மற்றும் யோகா மூலம் நோய் தடுப்பு குறித்து நிபுணர்கள் உரையாற்றினர்.

மேலும், ஒண்டிப்புதூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளத்தை அனுமதியின்றி கடப்பது, கற்கள் எறிவது, பொருட்களை வைப்பது போன்ற ஆபத்தான செயல்களை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பயணிகள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில் RPF Raising Day நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *