“அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள்
கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அலறித் தடுத்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே உள்ள…
