Headlines

அரவக்குறிச்சி : எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி

அரவக்குறிச்சி : எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி

அரவக்குறிச்சி அருகேயுள்ள கோவிலூரில் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியின் பின்பக்க ஜன்னல் கிரில்லை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அலாரத்தை சேதப்படுத்தியும் சிசிடிவி கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்தும் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.

வங்கிக்குள் இருந்த லாக்கர் பூட்டை உடைக்க முயன்ற போது அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடினர்.

கொள்ளையர்கள் லாக்கர் பூட்டை உடைக்க முயன்றபோது,வங்கி ஊழியர்களின் செல்போனுக்கு மெசேஜ் சென்றது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *