Headlines

குற்றாலம்அருவிகளில் வெள்ளப்பெருக்கு : குளிக்கத் தடை

குற்றாலம்அருவிகளில் வெள்ளப்பெருக்கு : குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காரணமாக அருவிகளில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.

இந்நிலையில், நேற்று பெய்த சாரல் மழை காரணமாக தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து மளமளவென அதிகரித்தது.

தற்போது மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரான பின்னரே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *