தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலக்கட்டு மலை கிராமம். இந்த கிராமத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 151 மக்கள் வசிக்கின்றனர். பல தலைமுறைகளாக வசித்து வரும் இந்த மக்கள் இன்றுவரை சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மலை கிராமத்தின் மல்லிகா என்ற பெண்ணுக்கு தீராத கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகன வசதிகள் சாலை வசதி இல்லாத காரணத்தால் தூளி கட்டி கிராம மக்கள் கரடு முரடான மலைப் பாதையில் சுமார் 8 கிலோமீட்டர் எடுத்து வந்து, பின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அங்கு பலத்த மழை பெய்து உள்ளதால் காட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும், தங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் இந்த மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்து துலிக்கட்டி மலைப்பாதையில் எடுத்து வந்த நிலையில், பொது தூரத்திலேயே உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
