Headlines

மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சிகளின் ஆணையர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து வரி தொடர்பான வழக்குகளில் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு மாநகராட்சி தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
மாநகராட்சிகள் சார்பில் பதிலளிக்க பலமுறை அவகாசம் வழங்கியது. மாநகராட்சிகள் சார்பில் யாரும்
ஆஜராகவில்லை.

ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின்,
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. எஸ் சமீரன் செப்டம்பர் 29லும்,
கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா 30லும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *