Headlines
வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

குறிஞ்சிப்பாடி போலீசார் தனது வாக்கு மூலத்தை மாற்றி விட்டதாக மர்ம நபர்களால் வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீ த லீடர் உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி குட்டைக்கார தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். அவர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பை சேர்ந்தவர். இவர் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி தனியார்…

Read More
காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

கள்ளக்குறிச்சி அருகேகம்பு காட்டிற்கு காவலுக்கு சென்ற மூதாட்டியை அடித்து கொலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி தனது காட்டில் விளைவித்த கம்பு பயிரினை பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை சென்றுள்ளார். இந்த நிலையில் வீடு திரும்பாத விருந்தாம் பாள் மூதாட்டியை அவரது ஐந்து மகள்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத மூதாட்டி அவரது…

Read More
மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் என நேபாளத்தில் மாயமான தஞ்சாவூர் பெண்மணியின் மகன் கண்ணீருடன் தெரிவித்தார். நேபாள நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உள்ள 36 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும் உள்ளனர். இதேபோல் தஞ்சாவூர் களிமேடு பகுதியை சேர்ந்த அன்பழகி சுற்றுலா சென்றுள்ளார். இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மகன் அருள்மொழி மற்றும் குடும்பத்தினருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது…

Read More
கேள்வி எழுப்பிய மாணவி தற்கொலை : தலைமையாசிரியர் மீது பாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்கு

கேள்வி எழுப்பிய மாணவி தற்கொலை : தலைமையாசிரியர் மீது பாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்கு

உசிலம்பட்டி என் அம்மா உங்கள் முன் ஏன் கைகட்டி நிற்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய பட்டியலின மாணவி தற்கொலை செய்த வழக்கில் தலைமையாசிரியர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி,…

Read More
கட்டுப்பாட்டை இழந்த கார் : 15 தூரத்தில் பறந்து விழுந்த இன்ஜின்

கட்டுப்பாட்டை இழந்த கார் : 15 தூரத்தில் பறந்து விழுந்த இன்ஜின்

கட்டுப்பாட்டை இழந்த கார் : 15 தூரத்தில் பறந்து விழுந்த இன்ஜின் வாணியம்பாடி அருகே ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி, பின்னால் வந்த காரின் மீதும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரின் இன்ஜின் 15 அடி தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை சென்னையைச் சேர்ந்த வினோத் கண்ணா…

Read More
பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை : பெற்றோர் உட்பட 4 பேர் கைது

பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை : பெற்றோர் உட்பட 4 பேர் கைது

ஆம்பூரில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தாய், தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்கா தோப்பு பாஷா நகர், பகுதியை சேர்ந்தவர், ரஹ்மத்துல்லா – ஹவாமா தம்பதியினர். இவர்களுக்கு, ஏற்கனவே 2 ஆண் பிள்ளைகள் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அன்று ஹவாமாவிற்கு 5 ஆவதாக பெண் பிள்ளை பிறந்தது. இந்நிலையில், குடும்ப…

Read More
தண்ணீர் இல்லாமல் வந்த தீயணைப்பு வாகனம் : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

தண்ணீர் இல்லாமல் வந்த தீயணைப்பு வாகனம் : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனம் போதிய தண்ணீர் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. திருப்பத்தூர் மாவட்டம் காவேரிப்பட்டு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தேங்காய் பட்டையில் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கயிறு தயாரிக்கும் உதிரி பாகங்களான தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் நார்கள் தீயில் கருகியது. இதையடுத்து தீயணைப்பு…

Read More
குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் : அரக்கோணம் அருகே சோகம்

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் : அரக்கோணம் அருகே சோகம்

அரக்கோணம் அருகே தாய் தனது இரு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மனைவி வள்ளி (23). இவர்களுக்கு பரத் (7), சந்தோஷ் (3) என 2 மகன்கள் இருந்தனர்.கணவர் உயிரிழந்த நிலையில், வள்ளி தனது இரு மகன்களுடன்…

Read More
தாய், மகள் வெட்டிக்கொலை : குடிபோதையில் சமையல் மாஸ்டர் வெறிச்செயல்

தாய், மகள் வெட்டிக்கொலை : குடிபோதையில் சமையல் மாஸ்டர் வெறிச்செயல்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தனது தாய் மற்றும் மகளை கொடுவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி, அம்மன்நகரை சேர்ந்தவர் சுரேஷ், 45. சமையல் மாஸ்டர். இவர் தனது தாய் உமாராணி, 65, மற்றும் மகள் சின்மய்யுடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஷாலினி, கணவரை பிரிந்து சில வாரங்களுக்கு முன் சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று…

Read More
சுமை தூக்கும் தொழிலாளி பலி : சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

சுமை தூக்கும் தொழிலாளி பலி : சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

மன்னார்குடியில் லாரியில் தவறிவிழுந்த சுமைதூக்கும் தொழிலாளி பின்சக்கரத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார. விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் , இவர் லோடுமேன் ஆக வேலை செய்துவருகிறார் ,நேற்று வெளியூர்களில் இருந்து வருகை தந்த சரக்குலாரியிலிருந்து மன்னார்குடி காமராஜர்சிலை அருகே சரக்குகளை சக்திவேல் இறக்கியுள்ளார் , சரக்குகளை இறக்கிவிட்டு லாரிமீது நின்றுள்ளார், அப்போது லாரியை ஓட்டுநர் இயக்கியதால்சுமைதூக்கும் தொழிலாளி சக்திவேல் லாரியின் பின்சக்கர…

Read More