ஆம்பூரில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தாய், தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்கா தோப்பு பாஷா நகர், பகுதியை சேர்ந்தவர், ரஹ்மத்துல்லா – ஹவாமா தம்பதியினர்.
இவர்களுக்கு, ஏற்கனவே 2 ஆண் பிள்ளைகள் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அன்று ஹவாமாவிற்கு 5 ஆவதாக பெண் பிள்ளை பிறந்தது.
இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 23ம் தேதியன்று ஹவாமா தனது உறவினர்கள் உதவியுடன், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஷம்ரின் தாஜ் என்பவருக்கு 1 லட்சம் ரூபாயிற்கு குழந்தையை விற்றுள்ளார்.
இதுகுறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் சுகப்பிரியா, ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில், தனிப்படை காவல்துறையினர் பெங்களூர் சென்று, குழந்தையை மீட்டு, குழந்தையின் பெற்றோரான ஹவாமா, ரஹமத்துல்லா மற்றும் குழந்தையை வாங்கிய ஷம்ரின் தாஜ், மற்றும் அவரது கணவர் அக்கர் பாஷா ஆகிய 4 பேரை கைது செய்து, ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து 4 பேர் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
பிறந்து 9 தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை 1 லட்சம் ரூபாயிற்கு தாய் தந்தை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
