மன்னார்குடியில் லாரியில் தவறிவிழுந்த சுமைதூக்கும் தொழிலாளி பின்சக்கரத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார. விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் , இவர் லோடுமேன் ஆக வேலை செய்துவருகிறார் ,
நேற்று வெளியூர்களில் இருந்து வருகை தந்த சரக்குலாரியிலிருந்து மன்னார்குடி காமராஜர்சிலை அருகே சரக்குகளை சக்திவேல் இறக்கியுள்ளார் ,

சரக்குகளை இறக்கிவிட்டு லாரிமீது நின்றுள்ளார், அப்போது லாரியை ஓட்டுநர் இயக்கியதால்
சுமைதூக்கும் தொழிலாளி சக்திவேல் லாரியின் பின்சக்கர பகுதியில் விழுந்ததால் சக்கரம் தலைமீது ஏறி இறங்கியது.
இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மன்னார்குடி நகர போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த சிசிடிவி காட்சியில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், சக தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர் .
