Headlines

TCD Newsroom

பானிபூரி கடையில் மாமூல் கேட்டு தாக்குதல் : 4 இளைஞர்கள் கைது

பானிபூரி கடையில் மாமூல் கேட்டு தாக்குதல் : 4 இளைஞர்கள் கைது

காட்பாடி பகுதியில் சாலையோர பானிபூரி வியாபாரிகளிடம் தினமும் ரூ.500 மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டி தாக்கிய4 இளைஞர்களைகாட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை, பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (75). இவரது மருமகன் சங்கர் (42) மற்றும் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடி பகுதியில் தனித்தனியாக பாணிபூரி கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்பாடி கீதா கிளினிக் எதிரே உள்ள பாணிபூரி…

Read More
தென்கொரிய விபத்தில் ஒரத்தநாடு இளைஞர் உயிரிழப்பு : திருமணம் நிச்சயமான நிலையில் சோகம்

தென்கொரிய விபத்தில் ஒரத்தநாடு இளைஞர் உயிரிழப்பு : திருமணம் நிச்சயமான நிலையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கண்ணுகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது32) இவர் தென்கொரியாவில் சியோரா நகரில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தொழிற்சாலையில் உள்ள ரோபோ ஒன்று, சுதர்சன் மார்பு பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து தென்கொரிய தமிழ் சங்கத்தினர் உதவி மூலம் சுதர்சனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது….

Read More
கன்னியாகுமரி : 7 மாதங்களுக்கு பின் பிடிபட்ட ராட்சத முதலை

கன்னியாகுமரி : 7 மாதங்களுக்கு பின் பிடிபட்ட ராட்சத முதலை

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே கோதையாற்றில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை இன்று வனத்துறையினர் விரித்திருந்த வலையில் சிக்கியது. இந்த முதலை திற்பரப்பு, கடையாலுமூடு, செங்குழிக்கரை, களியல் உள்ளிட்ட கோதையாற்றுப் பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு வந்தது. இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் திற்பரப்பு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் இருந்தனர். முதலையைப் பிடிக்க வனத்துறையினர், சென்னை முதலைப்பண்ணை நிபுணர்கள் மற்றும் 12…

Read More
சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் எரித்து கொலை - மனைவி கைது

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் எரித்து கொலை – மனைவி கைது

சென்னையில் சப்- இன்ஸ்பெக்டர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் (58) தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில், கணவரின் கொடுமையால் மனைவி வழக்கறிஞர் செல்வராணி (32), தேவா என்பவர் உதவியுடன் தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. செல்வராணி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான தேவாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More
கேரளா : 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரளா : 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மூன்று மணி நேரத்திற்கு தனிமைப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இன்று கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் , திருச்சூர் , பாலக்காடு,மலப்புரம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவானிலை…

Read More
நீர்பிடிப்பு பகுதகளில் தொடர் மழை : 30 அடியை கடந்த சிறுவாணி அணை நீர்மட்டம்

நீர்பிடிப்பு பகுதகளில் தொடர் மழை : 30 அடியை கடந்த சிறுவாணி அணை நீர்மட்டம்

​ கோவை நகரின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 30.63 அடியாக உயர்ந்து உள்ளதைத் தொடர்ந்து, கோவை மாநகரப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சிறுவாணி அடிவாரம் பகுதியில் 92 மி.மீ மழையும், சிறுவாணி அணைப் பகுதியில் 89…

Read More
கனமழை எதிரொலி : கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

கனமழை எதிரொலி : கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று, செப்டம்பர் 21ஆம் தேதி தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனத்துறை அறிவித்துள்ளது. அருவிப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மழை மற்றும் நீர்வரத்து நிலையைப் பொறுத்து, சுற்றுலா தளம்…

Read More
அன்பு தானே யாவும் : ரேஞ்சரின் உடலை 3 நாட்கள் கண் துஞ்சாது காத்த யானை

அன்பு தானே யாவும் : ரேஞ்சரின் உடலை 3 நாட்கள் கண் துஞ்சாது காத்த யானை

அவன் விடைபெறுவதற்காக வரவில்லை…தன் சகோதரனை யாரும் அவமதிக்காமல் பார்த்துக்கொள்வதற்காக வந்தான்.” என ரேஞ்சரின் உடலை பாதுகாத்த யானை குறித்து வனத்துறையினர் தெரிவித்த இந்த வாக்கியம் ஓர் வனப்பெருயிரின் பேரன்பிற்கான சாட்சியம். தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் தேசியப் பூங்காவில் தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மூத்த ரேஞ்சர் சிபோ ந்கோசி (Sipho Nkosi) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது வாகனம் ஆளில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், பூங்காவின் தொலைதூரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த…

Read More
ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ராஜபாளையம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ரக்காச்சி அம்மன் கோவில் நீர் வீழ்ச்சி உள்ளது. கடும் வறட்சியின் காரணமாக நீர்வீழ்ச்சியில் கடந்த பல மாதங்களாக தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்த கனமழையின் காரணமாக ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ராக்காச்சி அம்மன் கோவில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா சுற்றுலா பயணிகள் செல்ல…

Read More
உயிரிழந்த விவசாயிகுடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் : தமிழக அரசிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உயிரிழந்த விவசாயிகுடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் : தமிழக அரசிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார். திருச்சி, சமயபுரம் அருகே பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற…

Read More