Headlines

கனமழை எதிரொலி : கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

கனமழை எதிரொலி : கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று, செப்டம்பர் 21ஆம் தேதி தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனத்துறை அறிவித்துள்ளது.

அருவிப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மழை மற்றும் நீர்வரத்து நிலையைப் பொறுத்து, சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *