Headlines

நீர்பிடிப்பு பகுதகளில் தொடர் மழை : 30 அடியை கடந்த சிறுவாணி அணை நீர்மட்டம்

நீர்பிடிப்பு பகுதகளில் தொடர் மழை : 30 அடியை கடந்த சிறுவாணி அணை நீர்மட்டம்

​ கோவை நகரின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 30.63 அடியாக உயர்ந்து உள்ளதைத் தொடர்ந்து, கோவை மாநகரப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சிறுவாணி அடிவாரம் பகுதியில் 92 மி.மீ மழையும், சிறுவாணி அணைப் பகுதியில் 89 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்தத் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது.

​அணையின் தற்போது நீர்மட்டம் 872.74 மீட்டர் (மொத்த உயரம்: 878.50 மீட்டர்)

​தற்போதைய நீர் ஆழம்: 30.63 அடி (மொத்தக் கொள்ளளவு உயரம்: 49.53 அடி)

​பயன்பாட்டு நீர் சேமிப்பு: 303.38 மில்லியன் கனஅடி (M.C.Ft)

​கேரள மாநில அணைகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் (DSO) உத்தரவின்படி, அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடி வரை மட்டும் நீரை தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி மற்றும் வழியோரக் குடியிருப்புகளுக்கான குடிநீர் விநியோகமும் சீராக உயர்த்தப்பட்டு உள்ளது. 1000 மி.மீ, 500 மி.மீ மற்றும் 450 மி.மீ குழாய்கள் அடங்கிய முதன்மைக் குடிநீர் விநியோகக் கோடுகள் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 101.40 MLD அளவில் இருந்து இன்று 49.00 MLD அளவு குடிநீர் கோவை நகருக்கு விநியோகத்திற்காக அனுப்பப்பட்டு உள்ளது.

​அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து கோவை நகரின் குடிநீர் தேவை முழுமையாகப் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *