Headlines
தேவேந்திர குல வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து விடுவித்து, மீண்டும் பிசி பட்டியலில் இணைப்பதற்கு, தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் தலைவர்…

Read More
தமிழ்நாட்டிற்கு 6000 கன அடி நீர் : கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கு 6000 கன அடி நீர் : கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் 22 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்பட்ட நிலையில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு காணப்படும் நிலையில், போதிய அளவு நீரை கர்நாடகா திறந்து விட மறுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்…

Read More
இன்றே கடைசி நாள் : வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பு

இன்றே கடைசி நாள் : வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (AU) ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் 05.09.2026 முதல் 07.09.2026 வரை ( மூன்று நாட்கள் வரை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள முகப்பில் திறக்கப்பட்டு இருந்தது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான…

Read More
சொகுசு கார்களில் கஞ்சா கடத்தல் : பிடிபட்ட 3 பேர், தப்பியோடிய 3 பேருக்கு வலை

சொகுசு கார்களில் கஞ்சா கடத்தல் : பிடிபட்ட 3 பேர், தப்பியோடிய 3 பேருக்கு வலை

பெரம்பலூர் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 235 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் இருந்து இனோவா கார் மற்றும் சுசுகி எர்டிகா காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள…

Read More
நெஞ்சு வலியால் துடித்த பெண் : வயிற்றிலிருந்தை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்

நெஞ்சு வலியால் துடித்த பெண் : வயிற்றிலிருந்தை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவுபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுமிக்க திருமணமான பெண் ஒருவர், கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி அதிகரித்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை அன்று நரசராவுபேட்டையில் உள்ள…

Read More
ஆட்டுகுட்டியை மீட்க முயற்சித்து 80 அடி ஆழ கிணற்றில் சிக்கியஇளைஞர் : திருப்பத்தூர் அருகே பரபரப்பு

ஆட்டுகுட்டியை மீட்க முயற்சித்து 80 அடி ஆழ கிணற்றில் சிக்கியஇளைஞர் : திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகன் ஹரிஹரன் (27). இவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று அவரது நிலத்தில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இந்நிலையில் ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக ஹரிஹரன் கிணற்றில் இறங்கியுள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றபோது அவரால் ஏற முடியாமல் போனது. இதனால் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள்ளேயே ஹரிஹரன் சிக்கி தவித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு…

Read More
பேரவை தலைவர் நடுநிலையோடு தான் செயல்படுகிறார் : பிரேமலதா விஜயகாந்த்

பேரவை தலைவர் நடுநிலையோடு தான் செயல்படுகிறார் : பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்றத்தில் நேற்று முதலமைச்சர் பதிலுரை குறித்து திமுக-வினர் பேசுவதற்கு அனுமதி அளிக்காததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், பேரவை தலைவர் நடுநிலையோடு தான் செயல்படுகிறார் என திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்….

Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள டாக்ஸி செயலிகள் டாக்ஸி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும் அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்கள் முறையை கைவிட வேண்டும், ஆட்டோ களுக்கான மீட்டர் கட்டணத்தை…

Read More
வேகமாக நகர்த்தப்பட்ட கார் - இழுத்து செல்லப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் : பதைபதைக்க வைத்த சிசிடிவி

வேகமாக நகர்த்தப்பட்ட கார் – இழுத்து செல்லப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் : பதைபதைக்க வைத்த சிசிடிவி

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்ப வந்த காரில் பொருத்தப்பட்ட டிஸ்பென்ஸர் பைப்பை ஊழியர் எடுக்கும் முன் டிரைவர் காரை வேகமாக நகர்தியதால் காருடன் இழுத்து செல்லப்பட்ட பைப்பில் சிக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பத பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே கலர்கோடு பகுதியிலுள்ள பெட்ரோல் பம்பிற்கு வந்த காரில் பெட்ரோல் நிரப்பிய பெட்ரோல் பம்ப் ஊழியர் ராமச்சந்திரன் காரில் இருந்தவரிடம் பெட்ரோலுக்கான…

Read More
சாதிய வன்கொடுமை வழக்கு : 35 பேருக்கு ஜாமின், 5 பேருக்கு சிறை

சாதிய வன்கொடுமை வழக்கு : 35 பேருக்கு ஜாமின், 5 பேருக்கு சிறை

புதுக்கோட்டை அருகே கோயில் வழிபாடு தொடர்பாக இரு சமூகத்து இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 40 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 40 பேரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இதில் 35 பேருக்கு ஜாமீன் அளித்தும் ஐந்து பேரை நீதிமன்ற காவலில் வைக்கவும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டியில் உள்ள மூங்கில் அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களை வழிபாடு…

Read More