Headlines
குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை : காட்டுக்குள் விரட்டிய வனத்துறை

குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை : காட்டுக்குள் விரட்டிய வனத்துறை

கோவை அருகே கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகை மற்றும் விவசாய நிலத்தைசேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர்2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர். கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒற்றை யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த அந்த ஒற்றை யானை, அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்தது….

Read More
கடலூரில் மூதாட்டி கொ** : போலீசார் விசாரணை

கடலூரில் மூதாட்டி கொ** : போலீசார் விசாரணை

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் கடை வாசலை சுத்தம் செய்யும் பணியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலா என்ற மூதாட்டி கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்தார். இவர்பகல் நேரத்தில் பணிகளை முடித்துக் கொண்டு இரவில் அதே பகுதியில் உள்ள மார்க்கெட் நகர் ரயில் தண்டவாளம் அருகே உள்ள முரளி என்பவரின் வீட்டில் வாசலில் உறங்குவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இரவு முரளி என்பவரின் வீட்டு வாசலில்…

Read More
மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில்சமரச தீர்வு முகாம் விழிப்புணர்வு பேரணி

மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில்சமரச தீர்வு முகாம் விழிப்புணர்வு பேரணி

கோவையில் சமரச தீர்வு முகாம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையம் காட்டியுள்ள வழிகாட்டுதலின்படி பல்வேறு பகுதிகளில் சமரச தீர்வு முகாம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிர்மலா…

Read More
27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு

27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவும், கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக லில்லியும், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகனும், அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜும், குடிமைப் பொருள்…

Read More
"வீட்டின் முன் விளையாடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி" ; கோவையில் சோகம்

“வீட்டின் முன் விளையாடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி” ; கோவையில் சோகம்

​ கோவையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த ஒரு வயது ஆண் குழந்தை, சரியாக மூடப்படாத நிலத்தடித் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேணுகோபால் – கலைவாணி தம்பதியர். இவர்களுக்குத் தன்வந்த் (1) என்ற ஒரு வயதே ஆன ஆண் குழந்தை இருந்தது. ​இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தை தன்வந்த் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பகுதியில்…

Read More
13 லட்சம்நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் - நிரந்தரக் கிடங்குகளை விரைந்து அமைக்க வேண்டும் : அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

13 லட்சம்நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – நிரந்தரக் கிடங்குகளை விரைந்து அமைக்க வேண்டும் : அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகள் கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன. பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டம்…

Read More
மனுக்கள் பெற ஏஐ தொழில்நுட்பம் : அசத்தும் கிருஷ்ணகிரி ஆட்சியர்

மனுக்கள் பெற ஏஐ தொழில்நுட்பம் : அசத்தும் கிருஷ்ணகிரி ஆட்சியர்

நாட்டிலேயே முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், AI மூலம் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ள வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தினேஷ்குமார் திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14 வது கலெக்டராக பொறுப்பேற்றார். தூத்துக்குடியில் பணியாற்றிய போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் புது வாக்காளர்களை அதிக அளவில் சேர்த்தமைக்காக சிறந்த தேர்தல் அதிகாரி என்ற…

Read More
கல்குவாரி, கிரஷர்களை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

கல்குவாரி, கிரஷர்களை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் காரணமாக விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெடிகள் வெடிப்பதால் வெடிப்புகள் ஏற்பட்டு வீடுகளும் சேதம் அடைந்து வருவதாகவும், மேலும் கிரஷர்களில் இருந்து வெளியேறும் அதிகளவு தூசி காரணமாக பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது மட்டுமின்றி பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், கல்குவாரி மற்றும் கிரஷர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் உரிமத்தை…

Read More
" பெண்ணிடம் சங்கிலி பறிப்பு" : போதை வாலிபர்களை நைய்ய புடைத்த பொதுமக்கள்!

” பெண்ணிடம் சங்கிலி பறிப்பு” : போதை வாலிபர்களை நைய்ய புடைத்த பொதுமக்கள்!

​ கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் பெண் ஒருவரிடம் மது மற்றும் கஞ்சா போதையில் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வாலிபர்களை, பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில், பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவரை வழிமறித்த இரு வாலிபர்கள் திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப்…

Read More
இப்படியும் ஒரு அமைச்சரா? சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

இப்படியும் ஒரு அமைச்சரா? சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில் ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராகப் பணியாற்றி வரும் ராஜு என்பவர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். ​அப்போது அருகில் இருந்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி உடனடியாகச் செயல்பட்டு, ராஜுவுக்குச் சிபிஆர் முதலுதவி அளித்தார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ​அமைச்சரின் இந்தச் சமயோசித செயல்பாட்டைப் பாராட்டி, இது தொடர்பான காணொலி…

Read More