Headlines

மது பாட்டிலால் நண்பரை குத்தி கொன்ற இளைஞர் கைது

மது பாட்டிலால் நண்பரை குத்தி கொன்ற இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை அருகே, பழைய இரும்பு பொருட்கள், மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், நடத்திய புலனாய்வு விசாரணையில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர் அருப்புக்கோட்டை வடக்கு துரைராஜ புரம் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரியவந்தது. இவரை கொலை செய்தது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்
அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் இதை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *