கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க சென்றவர்கள் வந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்க் விளம்பர பலகைத் தூண் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தபோது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொருவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
