Headlines

ஏடிஎம்களை உடைத்து கொள்ளை : கும்மிடிபூண்டியில் துணிகரம்

ஏடிஎம்களை உடைத்து கொள்ளை : கும்மிடிபூண்டியில் துணிகரம்

கும்மிடிபூண்டி அருகே அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம்களை உடைத்து பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மா.பொ.சி.நகர் பைபாஸ் சாலையில் ஆக்ஸிஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் ஆகிய இரு வேறு வங்கி ஏடிஎம்மில் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஏடிஎம்மில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம்களை உடைத்து கொள்ளை : கும்மிடிபூண்டியில் துணிகரம்

ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 25ஆம் தேதி 12 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் பல லட்ச ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து பணம் எடுக்க முடியாமல் கொள்ளையர்கள் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *