கும்பகோணத்தில் இருந்து கைலாயம் காண நேபாளத்திற்கு சென்ற 57 நபர்களில் 37 நபர்களின் நிலை தெரியாமல் உள்ளது.
இதில் சுவாமிமலை வடக்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் ( 61). அவரது மனைவி ஜெயந்தி (54) ஆகியோர் குறித்த விவரங்கள் கிடைக்காததால் அவர்களது மகன்கள் அச்சமடைத்துள்ளனர்.

நேற்று அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இவர்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தங்களது பெற்றோர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றோம். இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை அரசு விரைவாக எனது பெற்றோரை நலமுடன் மீட்டு தரும்படி இவர்களது மகன்கள் மணிகண்டன், கோவிந்தராஜ் ஆகியோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
