Headlines

ஓய்வை அறிவித்த “GOAT” : அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஓய்வை அறிவித்த "GOAT" : அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா அணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

21 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, தனது உணர்ச்சிகரமான பதிவின் மூலம் ஓய்வு முடிவை நேற்று அறிவித்துள்ளார்.

இந்த முடிவு தனக்கு மிகவும் வேதனையானது என்றாலும், அணியிலிருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் பல ஏற்றத் தாழ்வுகளை கொண்டது.

2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி, கோபா அமெரிக்கா இறுதிப்போட்டிகளில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் என பல தடைகளை சந்தித்த அவர், இறுதியில் 2021 கோபா அமெரிக்கா, 2022 உலகக்கோப்பை மற்றும் 2024 கோபா அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பட்டங்களை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தந்தார்.

2022 உலகக்கோப்பை வெற்றி மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கையின் உச்சமாக அமைந்தது.

2026 உலகக்கோப்பையிலும் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த்தால்
உலக கோப்பை கனவு பறிபோனது.

இதையடுத்து சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை மெஸ்ஸி உறுதி செய்துள்ளார்.

39 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தேசிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனைகளையும் அவர் தக்க வைத்துள்ளார்.

மெஸ்ஸியின் ஓய்வு அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள கேரளாவிலும் இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி மீதான அபரிதமான அன்பு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனும் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை தொடர்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார்.

மெஸ்ஸி மீதான கேரள மக்களின் கால்பந்து ஆர்வமும், மாநில அரசின் முந்தைய முயற்சிகளும் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தன.

தற்போதையை
கேரளாவின் முதல்வர் வி டி சதீசன் தனது எக்ஸ் தளத்தில் “கோட்” என எழுதி, அதனருகிலேயே நொறுங்கிய இதயத்தை பதிவிட்டுள்ளார்.

கேரள மக்களின் வருத்ததை முதல்வர் பகிர்ந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றாலும், அவர் கிளப் அளவில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில், “அர்ஜென்டினா ஜெர்சியில் மெஸ்ஸியை இனி காண முடியாதா?” என்ற ஏக்கம் உருவாகியுள்ளது.

ஒரு தலைமுறையின் கால்பந்து நாயகன் ஒரு சகாப்தத்தின் முடிவு. சர்வதேச போட்டிகளில்
மெஸ்ஸியின் ஓய்வு உலக கால்பந்து ரசிகர்களுக்கு நிச்சயம் உணர்ச்சிகரமான தருணமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *