இயற்கை மருத்துவரை தாக்கி கார், பணம் பறிப்பு : மனைவி உள்பட 3 பேர் அதிரடி கைது
கோவை:கோவையில் குடும்பத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக, இயற்கை மருத்துவரை வீட்டில் புகுந்து கொடூரமாக தாக்கி ரூ.2.50 லட்சம் ரொக்கம், செல்போன்கள் மற்றும் சொகுசு காரை பறித்துச் சென்ற வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை வடவள்ளி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவை வடவள்ளி நியூ தில்லை நகரைச் சேர்ந்தவர் கிரிதரன் (வயது 47). இயற்கை மருத்துவம் முடித்துள்ள இவர், தனது வீட்டிலேயே யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகிறார்….
